திகம்கர்க் : மத்திய பிரதேசம் மாநிலம் நசர்பக் பகுதியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தனியார் ஊடகம் சார்பில் விவாத நிஜழ்ச்சி கடந்த சனிக்கிழமை (ஏப்.20) இரவு நடத்தப்பட்டு உள்ளது. பாஜக சர்பில் மாவட்ட ஊடக பிரிவு பொறுப்பாளர் பிரபுல் திவேதி பங்கேற்று உள்ளார். அதேபோல் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.
விவாத நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த போது பாஜக சார்பில் பங்கேற்ற பிரபுல் திவேதியின் கருத்தை எதிர்த்து பார்வையாளர்கள் பிரிவில் இருந்த இருவர் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. பார்வையாளர்கள் பிரிவில் இருந்த இருவரும் பிரபுல் திரிவேதியின் கருத்துக்கு எதிரான கோஷம் எழுப்பியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளை உரக்க கத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து பிரபுல் திவேதியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.