தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம் - lok sabha election 2024 phase 2

2ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்
lok sabha election 2024 phase 2 polling live updates

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 6:51 AM IST

Updated : Apr 26, 2024, 2:19 PM IST

14:16 April 26

மக்களவைத் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு: பிற்பகல் 1 மணி நிலவரம்

அசாம்- 46.31%

பீகார் - 33.80%

சத்தீஸ்கர் - 53.09%

ஜம்மு-காஷ்மீர் - 42.88%

கர்நாடகா - 38.23%

கேரளா - 39.26%

மத்தியபிரதேசம் - 38.96%

மகாராஷ்டிரா - 31.77%

மணிப்பூர் - 54.26%

ராஜஸ்தான் - 40.39%

திரிபுரா - 54.47%

உத்தரபிரதேசம் - 35.73%

மேற்கு வங்கம் - 47.29%

12:24 April 26

காலை 11 மணி நிலவரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரம்

1.அசாம்- 27.43%

2.பீகார் - 21.68%

3.சத்தீஸ்கர் - 35.47%

4.ஜம்மு-காஷ்மீர் - 26.61%

5.கர்நாடகா - 22.34

6.கேரளா - 25.61

7.மத்தியபிரதேசம் - 28.15%

8.மகாராஷ்டிரா - 18.83

9.மணிப்பூர் - 33.22%

10.ராஜஸ்தான் - 26.84%

11.திரிபுரா - 36.42%

12.உத்தரபிரதேசம் - 24.31%

13.மேற்கு வங்கம் - 31.25%

12:13 April 26

மத்தியபிரதேசத்தில் 28.15% வாக்குப்பதிவு

மத்தியபிரதேச மாநிலத்தில் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.15 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

10:45 April 26

விவிபேட் 100% சரிபார்ப்பு மனுக்கள் தள்ளுபடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வாக்குகளை விவிபேட் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

10:24 April 26

டொவினோ தாமஸ் வாக்களிப்பு

திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான டொவினோ தாமஸ் திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இரிங்கலக்குடா வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

10:22 April 26

ராகுல் டிராவிட் வாக்களிப்பு

கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட்(Rahul Dravid), அணில் கும்ளே உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்

10:19 April 26

முன்னாள் பிரதமர் தேவகவுடா வாக்களிப்பு

கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான தேவகவுடா வாக்களித்தார்.

10:08 April 26

2ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

கர்நாடகா - 9.21%

கேரளா - 11.98%

மத்தியபிரதேசம் - 13.82%

மகாராஷ்டிரா - 7.45%

மணிப்பூர் - 15.49%

ராஜஸ்தான் - 11.77%

அசாம் - 9.71%

பீகார் - 9.84%

சத்தீஸ்கர் - 15.42%

ஜம்மு-காஷ்மீர் - 10.39%

திரிபுரா - 16.65%

உத்தரபிரதேசம் - 11.67%

மேற்கு வங்கம் - 15.68%

திரிபுரா - 16.65%

உத்தரபிரதேசம் - 11.67%

மேற்கு வங்கம் - 15.68%

09:30 April 26

நடிகரும் பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி கேரளாவில் வாக்களிப்பு

கேரளா மாநிலம் திருச்சூரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி வாக்களித்தார்.

09:26 April 26

'கேரளாவில் 20 தொகுதிகளிலும் யுடிஎஃப் கூட்டணி வெல்லும்' - கே.சி.வேணுகோபால்

கேரளாவின் ஆலப்புழா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆலப்புழா மக்கள் என்னுடன் நிற்பார்கள் என நம்புகிறேன். இத்தேர்தலின் முதல் கட்டத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி பீதியடைந்துள்ளார். கேரளாவில் 20 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி(UDF) வெற்றி பெறும்' என நம்பிக்கை.

09:20 April 26

'ராஜஸ்தானில் 25 தொகுதிகளில் பாஜக வெல்லும்' - சி.பி.ஜோஷி நம்பிக்கை

ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவர் சி.பி.ஜோஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராஜஸ்தான், முகலாய ஆக்கிரமிப்பாளர்களை ஏற்காத பூமி. இது மாவீரர்களின் பூமி. இந்த மண்ணில் காங்கிரஸின் ஆட்சியில் எங்காவது இதனை சாந்தப்படுத்தும் அரசியல் மலரலாம். பாஜக ராஜஸ்தானில் 25 தொகுதிகளிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்' என நம்பிக்கை.

09:06 April 26

'நல்ல கைகளின் வசம் அரசியலமைப்பு' - ஓம் பிர்லா

ராஜஸ்தான் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோட்டா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஓம் பிர்லா, "இது அரசியல் சாசனத்தை காப்பாற்றும் போராட்டம் அல்ல; அரசியலமைப்பு நல்ல கைகளின் வசம் உள்ளது. தேர்தலுக்காக வெறும் பொய்களைப் பரப்புகிறார்கள்" எனக் குற்றச்சாட்டு

09:02 April 26

'மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்' - நிர்மலா சீதாராமன்

பெங்களூருவில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "அதிகமான மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். மக்கள் நிலையான ஆட்சியை விரும்புவதோடு நல்ல கொள்கைகள், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிவதாகவும்; பிரதமர் மோடி தனது பதவியைத் தொடர விரும்புவதாகவும்" கூறினார்.

08:57 April 26

கேரளா கண்ணூரில் பினராயி விஜயன் வாக்களிப்பு

கேரளா மாநிலம் கண்ணூரில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் 8.22 மணியளவில் வாக்களித்தார்.

08:52 April 26

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களிப்பு

பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8.21 மணியளவில் வாக்களித்தார்.

08:12 April 26

மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான முரளீதரன் வாக்களிப்பு

திருவனந்தபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ராஜீவ் சந்திரசேகரும், காங்கிரஸ் சார்பில் சசி தரூரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அமைச்சரும், அட்டிங்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான முரளீதரன் திருவனந்தபுரத்தில் வாக்களித்தார்.

08:06 April 26

'பிளவுபடுத்தும் அரசியல்..மாற்றத்தைக் கொண்டுவர வாக்களித்தேன்' - நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூருவில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், 'எனது வாக்கு எனது உரிமைக்காகவும், என்னைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சக்திக்காகவும், நாடாளுமன்றத்தில் எனது குரலாக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவும் வாக்களித்துள்ளேன். இது மிகவும் முக்கியமானது.

கடந்த காலங்களில் நாங்கள் கண்ட வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலின் காரணமாக நீங்கள் யாரை நம்புகிறீர்கள்? நான் நம்பும் வேட்பாளருக்கும், அவர்கள் கொண்டு வந்த தேர்தல் அறிக்கையை பொருத்தும், வேண்டிய மாற்றத்திற்காகவும் வாக்களித்தேன்' என்றார்.

08:00 April 26

பெங்களூருவில் வாக்களிக்கும் நிர்மலா சீதாராமன்

கர்நாடகாவின் 14 தொகுதிகளுக்கு நடக்கும் 2-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தையுடன் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடிக்கு வந்தார்.

07:56 April 26

காசியாபாத் பாஜக வேட்பாளர் அதுல் கர்க் வாக்களிப்பு

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் தொகுதி வேட்பாளர் அதுல் கர்க் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்று வாக்களித்தேன். வாக்களிப்பது தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு" எனத் தெரிவித்தார்.

07:52 April 26

மீண்டும் மோடி பிரதமர் ஆவார்..! ராஜஸ்தான் பாஜக தலைவர் நம்பிக்கை

ஜலாவரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் பாஜக தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறுகையில், "நாடு வளர்ச்சியை விரும்புகிறது, அதனால்தான் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

07:46 April 26

மத்தியப் பிரதேச கேபினட் அமைச்சர் பிரகலாத் சிங் படேல் வாக்களிப்பு

மத்திய பிரதேசம் மாநிலம் நரசிங்பூரில் மத்தியப் பிரதேச கேபினட் அமைச்சர் பிரகலாத் சிங் படேல் வாக்களித்தார்.

07:44 April 26

நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்

பெங்களூருவில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வாக்கை செலுத்தினார்.

07:23 April 26

பெரியோரிடம் ஆசிர்வாதம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வைபவ் கெலாட்!

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், ஜலோர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைபவ் கெலாட்டும் வாக்குப்பதிவுக்கு முன் தனது முன்னோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

07:12 April 26

வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப் பதிவு. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

07:03 April 26

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி என்டிஏ கூட்டணி வேட்பாளர்

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கை முதல் ஆளாக செலுத்துவதற்காக வரிசையில் காத்திருக்கிறார்.

07:01 April 26

2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கியது.

06:17 April 26

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கேரளா, கர்நாடகா அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று 2ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு (lok sabha election 2024 phase 2 polling) காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

17வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து 18-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறத் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 2024, மார்ச் 16ஆம் தேதி அறிவித்த படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில், தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகின.

இதைத்தொடர்ந்து, கேரளா, கர்நாடகா அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

Last Updated : Apr 26, 2024, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details