டெல்லி: இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கடந்த 2022ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அவரது பதவிக் காலம் கடந்த மே 31ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை நீட்டிப்பு செய்தது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார். இந்நிலையில், வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமைத் தளபதியாக லெப்டினனட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய ராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி பணியாற்றி வந்தார். ஏறத்தாழ 39 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் Vice Chief of Army Staff, Northern Army Commander, மற்றும் DG Infantry என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் உபேந்திர திவேதி. மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பல்வேறு பணிச் சூழல்களுக்கு மத்தியில் பணியாற்றிய நல்ல அனுபவம் வாய்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுமை விரும்பியான லெப்டினனட் ஜெனரல் உபேந்திர திவேதி, இந்திய ராணுவத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வரும் ஜுன் 30ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில் அதே நாளில் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவிவேதி புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1964ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்த உபேந்திர திவேதி மத்திய அரசு நடத்தி வரும் ராணுவத்திற்கான சைனிக் பள்ளியில் பயின்றவர் ஆவார். கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் காலாட்படையில் வீரராக உபேந்திர திவேதி பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து இந்திய ராணுவத்தின் 18 ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், பிரிகேட் 26 பிரிவு அசாம் ரைபிள்ஸ், டிஐஜி, கிழக்கு அசாம் ரைபிள்ஸ் மற்றும் 9 கார்ப்ஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.
இதையும் படிங்க:உத்தரகாண்டில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! புனித யாத்திரையின் போது சோகம்! - Uttarkhand Bus Accident