தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயநாடு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி - வனத்துறை கூண்டில் சிக்கியது! - TIGER

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலி, வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

கூண்டில் சிக்கிய புலி
கூண்டில் சிக்கிய புலி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 12:19 PM IST

வயநாடு:கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர் .

கேரளா வயநாடு மாவட்டம் புல்பள்ளி (அமரகுனி) குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புலி, வனத்துறையினர் அமைத்த கூண்டில் இரவில் சிக்கியது. அமரகுனி அருகே துப்ரா என்னுமிடத்தில் மக்களையும் அச்சுறுத்தி வளர்ப்பு கால்நடைகளையும் புலி தாக்கி கொன்றது. இதனால் கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்தனர்

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறைக்கு போக்குக்காட்டி வந்த புலியை கடந்த நான்கு நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர். மேலும் வனத்துறையின் மருத்துவக் குழுவினருடன் கர்நாடக மாநில முத்தங்காவில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இருந்தாலும், வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. கிராம மக்களுடன் இணைந்து வனத்துறையினர் வைத்த கூண்டிலும் புலி சிக்காமல் போக்குக் காட்டி வந்தது. இதனால், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சம் அடைந்து காணப்பட்டனர்.

இந்த நிலையில் தேவர்கட்டா-துப்ரா சாலையை புலி கடப்பதை காரில் பயணித்த ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது புலி கூண்டுக்குள் புகுந்தது.13 வயதுடைய புலி குப்பாடி பகுதியில் வனத்துறையினர் அமைத்து வைத்திருந்த கூண்டில் பிடிபட்டது. புலி வனவிலங்கு சரணாலயத்துக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. கூண்டில் சிக்கிய புலியால் பொதுமக்களுக்கும், வனத்துறைக்கும் நிம்மதி அளித்துள்ளது.

அமரகுனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 7 ம் தேதி முதல் புலி நடமாட்டம் இருந்தது. 10 நாட்களில் ஐந்து ஆடுகளை புலி கொன்றதால் மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்தனர் . புலி நடமாட்டம் உள்ளதையடுத்து, அமரகுனி அருகே உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மூன்று உள்ளூர் வார்டுகளுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது கூண்டில் புலி சிக்கியதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details