கர்நாடகா: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இட ஒதுக்கீட்டில் ஊழல் (மூடா) நடந்ததாக எழுந்த புகாரில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது பதவி விலகல் கோரிக்கையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நிராகரித்துள்ளார். இந்த முடிவானது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 17A மற்றும் பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா 2023 பிரிவு 218 ஆகியவற்றின் கீழ் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர், இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். கர்நாடகவில் ஆளும் கட்சியை கவிழ்க்க பிற கட்சிகள் சதி செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு பெரிய சதி தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.
டெல்லி, ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் பாஜக ஆளும் அரசை கவிழ்த்துள்ளது. கர்நாடகாவில் ஆளும் அரசை கவிழ்ப்பதில் ஜே.டி, பாஜக உட்பட பல கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நான் பதவி விலகப் போவதில்லை. காங்கிரஸ் உயரதிகாரிகள் என்னுடன் உள்ளனர். ஒட்டுமொத்த அமைச்சரவையும், அரசும் என்னுடன் உள்ளது. அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என்னுடன் உள்ளனர் எனக் கூறி உள்ளார்.