கான்பூர்:செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக, கல்யாண்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனியார் மருத்துவமனை இயக்குனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கல்யாண்பூரின் காவல் உதவி ஆணையர் (ஏசிபி) அபிஷேக் பாண்டே கூறுகையில், “கான்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களாக செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ.3) மாலை மருத்துவமனையில், இயக்குனர் அளித்த விருந்து ஒன்றில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க:"சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யான புகார் அளித்த தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு"- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
அதனைத் தொடர்ந்து, பணியின் காரணமாக செவிலியரை அன்று இரவு மருத்துவமனையில் இருக்குமாறு இயக்குனர் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரை தனது அறைக்கு அழைத்த இயக்குனர், அவருக்கு மயக்க மருந்து கலந்த ஜூசைக் கொடுத்து, அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கபட்ட செவிலியர் அளித்த புகாரின் அடிப்படையில், கல்யாண்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பரிசோதனை செய்து, பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை இயக்குனர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்