தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளியானது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி? - ASSEMBLY ELECTIONS

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி இரண்டு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது.

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 7:55 PM IST

ஹைதராபாத்:மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி இரண்டு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட 15ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 2,086 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வாக்குப்பதிவுக்காக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 1,00,186 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மாலை ஐந்து மணி நிலவரப்படி 288 தொகுதிகளிலும் சராசரியாக 58.22 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. அதனை தொடர்ந்து இன்று (நவ.20) இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் மாலை ஐந்து மணிவரை 67.59 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஓசூர் பயங்கரம்.. அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 தொகுதிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளும் தேவை.

கருத்து கணிப்பு முடிவுகள்:மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி மகாராஷ்டிராவில் ஏபிபி மெட்ரிஸ் கருத்துக் கணிப்புப்படி பாஜக கூட்டணி 150 முதல் 170 இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 தொகுதிகள் கிடைக்கும் எனவும் ஏபிபி மெட்ரிக் கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

பி-மார்க் அமைப்பின் கருத்துக் கணிப்பின் படி மகாராஷராவில் பாஜக கூட்டணிக்கு 137 முதல் 157 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 126 முதல் 146 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், டைம்ஸ் நவ்-ஜேவிசி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 40-44 தொகுதிகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 30-40 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details