சிம்லா:செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் குல்திப் சிங் பதானியா, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹோசியர் சிங், அஷிஷ் சர்மா மற்றும் கேஎல் தாகூர் ஆகியோரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இந்த மூன்று எம்எல்ஏக்களும் கடந்த மார்ச் 22ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மார்ச் 23ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர்.
மூன்று எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சபாநாயகர் குல்திப் சிங் பதானியா தெரிவித்தார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மூவரின் ராஜினாமா குறித்து விசாரணை நடத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இனி அவர்கள் மூவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.