தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியல் வரலாற்றில் நீடிக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. ஆட்சி மாற்றம் மற்றும் ஆட்சியாளர் மாற்றம்..ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் தகவல்! - ஜார்கண்ட் அரசியல் களம்

Bihar and Jarkhand Floor test: நம்பிக்கையில்ல தீர்மானம் மூலம் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றமும், ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஆட்சியாளர் மாற்றம் குறித்து ராஜ்யசபாவின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான விவேக் கே.அக்னிஹோத்ரியின் விரிவான விளக்கத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Bihar and Jarkhand Floor test
Bihar and Jarkhand Floor test

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 10:58 PM IST

ஹைதராபாத்: இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏறத்தாள இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் என அரசியல் தலைவர்களில் இருந்து சாமானிய மக்கள் வரை அனைவரும் அதீத எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். ஆட்சி மாற்றம் நிகழுமா, புதிய கட்சிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இரு மாநில அரசியல் தளங்களில் நிகழ்ந்த திடீர் மாற்றங்கள் அரசியல் களத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இரு மாநிலங்களின் இந்த அரசியல் மாற்றத்தின் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற பலரின் கேள்விகளுக்கு முழுவதுமாக விடையளிக்க முடியாவிட்டாலும், ஆளும் கட்சிகளில் கட்சி மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் சர்வசாதாரணக் காரணியாக அமைந்துவிடாது என்பதே பெரும்பாலான அரசியல் தலைவர்களின் பதிலாக அமைகிறது.

ஒருபுறம் ஆட்சி மாற்றம் என்றால், யாருக்கும் சலித்தவர்கள் நாங்கள் இல்லை என்று கட்சியையே மாற்றி இந்திய அரசியலையே உலுக்கியுள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். அப்போ ஆட்சி மாற்றம் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லையா என்று கேட்டால், ஆம் ஆட்சி மாறியதே தவிர்த்து கட்சி தன் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்படவில்லை என மகிழ்கின்றனர் ஜார்கண்ட் மாநிலம் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவினர். இது குறித்து விரிவாக விளக்கமளிக்கிறார் ராஜ்யசபாவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான விவேக் கே.அக்னிஹோத்ரி.

என்ன நடந்தது இரு மாநில அரசியல் களத்தில்?: ஜார்கண்ட மாநிலத்தைப் பொறுத்தவரையில், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது. அதில், காங்கிரஸுடனான கூட்டணியில் ஆட்சியைப் பிடித்தது அம்மாநிலக் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா. மொத்தம் 81 தொகுதிகளில் 47இடங்களைக் கைப்பற்றி ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சரானார்.

இந்நிலையில், நில மோசடி மூலம் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அம்மாநில முதலமைச்சரான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் ஹேமந்த் சோரன் பதவி விலகினார். இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என அலாதியாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடும் சவால்களுக்கு நடுவில் போக்குவரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார்.

முன்னதாக சம்பாய் சோரன் பதவி ஏற்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரிய போது, பதவி ஏற்க அழைக்காமல் காலம் தாழ்த்தியதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிப்.2ஆம் தேதி ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியாளர்கள் மாற்றம் நிகழ்ந்த நிலையில், அதே சமயத்தில் பீகார் மாநிலத்தில் ஆட்சியே மாற்றம் கண்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்டு சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது பீகார் மாநிலம். அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடனான கூட்டணியில் ஆட்சியைப் பிடித்து நிதிஷ்குமார் முதலமைச்சரானார்.

ஆனால் அந்தக் கூட்டணி ஒராண்டுக்கூட முழுமையடையாத நிலையில், நிதிஷ்குமார் பாஜகவுடனான கூட்டணியை முறித்தார். பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். இதனிடையில் பாஜகவைத் தோற்கடிக்க இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் இந்தியா(INDI alliance) கூட்டணியிலும் முக்கிய பங்காற்றினார்.

இந்த சமயத்தில் கூட்டணியில் கொண்ட பல்வேறு முரண்பாடுகளால் இடதுசாரிகளுடனான கூட்டணியையும், இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். பின்னர் ராஜினாமாவை அறிவித்த அதே நாளில் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைத்துக் கொண்டு மூன்றாவது முறையாக மீண்டும் அம்மாநில முதலமைச்சரானார். இதன்மூலம் கடந்த 4ஆண்டுகளில் 2முறை பதவியை ராஜினாமா செய்து 3வது முறையாக முதலமைச்சராகும் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும், பாஜகவைச் சேர்ந்த விஜய்குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் துணை முதலமைச்சராகப் பதவியேற்றனர். இந்நிலையில் அம்மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் போன்ற முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், நிதிஷ்குமார் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் எழுப்பப்பட்டது. இதில் பாஜகவுடனான கூட்டணியில், ஜேடியு- 45 எம்.எல்.ஏக்களும், பாஜக - 78எம்.எல்.ஏக்களும், ஜெச்.ஏ.எம்.எஸ் - 4 எம்.எல்.ஏக்களின் என மொத்தம் 127எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்க வைத்தார் நிதிஷ்குமார்.

இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று(பிப்.12) தொடங்கிய நிலையில், 179(C)பிரிவின் கீழ் சட்டப்பேரவை தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான அவாத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக நிதிஷ்குமார் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்நிலையில் சட்டப்பேரவைச் செயலர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாசித்த நிலையில், சபாநாயகரை நீக்கக்கோரிய தீர்மானத்திற்கு 125எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தும், 112எம்.எல்.ஏக்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். இதனால் சபாநாயகர் பொறுப்பில் இருந்த அவாத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டார்.

முன்னதாக இதேபோன்று 2022ஆம் ஆண்டில் ஜேடியு மற்றும் பாஜவவின் முந்தைய கூட்டணியின் போது, தற்போதைய துணை முதலமைச்சரும், பாஜக மாநிலத் தலைவரான விஜயகுமார் சின்ஹாவின் பதவி விலகலும் இதேபோன்ற சூழலைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

எங்கிருந்து துவங்கியது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வரலாறு: முதன்முதலில் நம்பிக்கையில்ல தீர்மானம் கர்நாடாக சட்டசபையில் எஸ்.ஆர்.பொம்மை ஆட்சியில் இருந்து தொடக்கம் காண்கிறது. 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியில் இருந்து 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி வரையில் கர்நாடக முதலமைச்சராகப் பதவி வகித்துவந்தார் எஸ்.ஆர்.பொம்மை. இவரது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதையடுத்து, 356பிரிவின் கீழ் அவரது ஆட்சியை ரத்து செய்து குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு வழிவகுத்தார் அப்போதைய குடியரசுத் தலைவர்.

தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் பொம்மை முன்வந்த போது அப்போதைய ஆளுநர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து ஆட்சியைத் தக்க வைக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் பொம்மை. அதில், ஆட்சியைத் தக்கவைக்க சட்டசபையில், பெரும்பான்மையை நீருபிப்பது அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது போன்று நாகலாந்து, மேகலாயா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் என அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்கள் கர்நாடகா மாநிலத் தீர்ப்பை முன்வைத்து சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்.

இதையும் படிங்க:"மோடி போட்டியிடும் தொகுதியில் விவசாயிகள் நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்வோம்" - அய்யாக்கண்ணு எச்சரிகை..

ABOUT THE AUTHOR

...view details