டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சரிதா விகார் பகுதியில் துக்ளகாபாத்- ஓக்லா இடையே சென்று கொண்டு இருந்த தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ பற்றியது. தீ வேகமாக பரவிய ரயிலின் மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து பாதி வழியில் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு 6 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் பற்றியை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ரயிலில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இரண்டு பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், மூன்றாவது ரயில் பெட்டி பகுதியாக சேதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.