தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி- டிஆர்டிஓ! - DRDO

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வான் சாதனத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 7:17 AM IST

டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தனது பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது. ஏறத்தாழ 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் இந்த ஏவுகணைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தம்ராவில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட நிலையில், அதை ரேடார் மூலம் கண்டறிந்து வான் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கு சிக்னல் அளித்ததாகவும், இதையடுத்து சந்திப்பூரில் சமிக்ஞையை பெற்ற வான் பாதுகாப்பு இடைமறிப்பு அமைப்பு செயல்படத் தொடங்கி, ஏவுகணையை இடைமறித்து அளித்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்னல் கிடைத்ததும் அதிவேகத்தில் செயல்படத் தொடங்கிய வான் பாதுகாப்பு இடைமறிப்பு அமைப்பு, துல்லியமாக இலக்கை இடைமறித்து அழித்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் சோதிக்கப்பட்டது.

அனைத்து சோதனை நோக்கங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. எதிரி படைகளின் கண்டம் விட்டு பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணையை நிலத்திலும் கடலிலும் பயன்படுத்தப்படும் ஆயுத அமைப்பின் ரேடார்களால் கண்டறிந்து, இந்த வான் பாதுகாப்பு இடைமறிப்பு அமைப்பை செயல்படுத்தியதாக தெரிவித்து உள்ளனர்.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பூமியின் வளிமண்டலத்துக்குள் உள்ள இலக்கை இடைமறித்து அழிக்கும் இரண்டாம் நிலை ஏவுகணை, விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, அனைத்து அம்சங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டது.

இந்தப் பரிசோதனை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் உள்நாட்டு திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதற்கு டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த கருவி விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்ட மசோதா.. பீகார் அரசு அதிரடி! - Bihar Bill for Paper leak

ABOUT THE AUTHOR

...view details