சென்னை:இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும் தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், 'இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்கான தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) இணையதளத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகஸ்ட் 23 ந் தேதி தொடங்கி வைத்தார்.
தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி தேசிய மருத்துவப்பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அலோபதி (MBBS) பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கும் என்எம்ஆர் ஒரு விரிவான வெளிப்படையான தரவுத்தளமாக இருக்கும். என்எம்ஆரின் தனித்தன்மை என்னவென்றால், இது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.