ETV Bharat / bharat

"அப்படியெல்லாம் செய்ய முடியாது".. கொல்கத்தா ஆர்..ஜி.கர் மருத்துவமனை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - R G KAR MEDIC CASE

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை மேற்கு வங்க மாநிலத்துக்கு வெளியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

விசாரணை நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்படும் சஞ்சய் ராய்
விசாரணை நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்படும் சஞ்சய் ராய் (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 7:03 PM IST

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத் தலைநகர், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.. இவ்வழக்கின் நிலை அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள விவரங்களை, கொல்கத்தாவில் உள்ள சீல்டா குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை பதிவு செய்தது. முன்னதாக, கடந்த மாதம் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல்கட்ட குற்றப்பத்திரிகையில், 'ராய் ஒருவரே பிரதானமாக குற்றம் செய்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, இரண்டு மாதங்களுக்கு மேலாக இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'கடந்த 90 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில், மாநில போலீசாரின் கருத்துகளையே பிரதிபலிப்பதை தவிர, சிபிஐ வேறொன்றும் செய்யவில்லை' என்று ராய் தரப்பு வழக்குரைஞர், நீதிபதிகள் முன் கடுமையான வாதத்தை முன்வைத்தார்.

இதையும் படிங்க: 'அரசுப் பணி நியமன விதிமுறைகளை இஷ்டத்துக்கு மாற்ற முடியுமா?' உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ' வழக்கின் சாட்சியங்களை விசாரித்த பிறகு தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடுவதற்கு தேவையான அதிகாரம் விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு உள்ளது' என்று தெரிவித்தார்.

அப்போது, 'இவ்வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கவுள்ளதாகவும், விசாரணைக்கு இடையூறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவ்வழக்கின் விசாரணையை மேற்கு வங்க மாநிலத்துக்கு வெளியே நடத்தலாம். இதற்கான உதாரணங்கள் உள்ளன' என்று மற்றொரு வழக்குரைஞர் வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், " ஒரு மாநிலத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கை, வெளி மாநிலத்துக்கு மாற்றுவதற்கான உதாரணங்கள் இருப்பதை இந்த நீதிமன்றம் நன்கறியும். அண்மையில் மணிப்பூர் சம்பந்தமான சில வழக்குகளும் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்டன.

ஆனால், இந்த வழக்கில் நாங்கள் அவ்வாறு செய்வதாக இல்லை. விசாரணை நீதிமன்ற நீதிபதியின் முன்பே இவ்வழக்கின் விசாரணை நடைபெறட்டும். இல்லையெனில், நமது நீதிபரிபாலன முறையே நாமே சந்தேகிக்கும்படி ஆகிவிடும்" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாக கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.