ETV Bharat / sports

14 ஆண்டுக்கு பின் சென்னையில் நடைபெறும் வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டி! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? - VOLLEYBALL WORLD BEACH PRO TOUR

சென்னையில் வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டியில் 150 வீரார்கள் பங்கேற்க இருப்பதாகவும், வெற்றி பெறக்கூடிய அணிகளுக்கு ரூ.1.75 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் மெரினா கடற்கரை விளையாட்டு கிளப் தலைவர் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை விளையாட்டு கிளப் நிர்வாகிகள்
மெரினா கடற்கரை விளையாட்டு கிளப் நிர்வாகிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 9:21 PM IST

சென்னை: சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் (volleyball world beach pro tour) தொடங்க உள்ளது. மெரினா கடற்கரை விளையாட்டு கிளப் சார்பாக நடைபெறும் இந்த போட்டிகள் குறித்து மெரினா கடற்கரை விளையாட்டு கிளப்-இன் தலைவர் ரவிகாந்த் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டிகள் நடைபெற உள்ளது. இது மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சர்வதேச கூட்டமைப்பிடம் முறையாக அனுமதி வாங்கி தான் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தமாக 150 வீரார்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரார்கள் கூட இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வானது ஈசிஆரில் உள்ள இண்டர் கான்டினென்டல் என்ற தனியார் ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் 42 நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் 24 தரவரிசை அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளது. 2,000 பார்வையாளர்கள் இருக்கைகளுடன் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Eurosport சேனல் போட்டி நாட்களில் தினமும் மூன்று மணி நேரம் மாலை 4 - 7 வரை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: உலக அரங்கில் சாதிக்கத் தயாராகும் சென்னை வீரர்கள்!

வரும் 21ம் தேதி தொடக்க நிகழ்வோடு போட்டிகள் தொடங்கி, 24ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். சமீபத்தில், முதலமைச்சர் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், பீச் வாலிபால் போட்டிகளை நாங்கள் நடத்தினோம். கடற்கரை இல்லாத மாவட்டங்களில் இருந்து வந்த இரண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக பீச் வாலிபால் போட்டிகளை விளையாடினர்.

தற்போது நடக்க இருக்கும் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு முறையாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று நடத்த இருக்கிறோம். வரும் காலங்களில் அரசு இந்த விளையாட்டு போட்டிகளுக்கு நிதியுதவி அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணிகளுக்கு ரூ.1.75 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.