ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் துணிகரம்... கிராம பாதுகாப்புப் படை உறுப்பினர்களை கடத்தி கொன்ற பயங்கரவாதிகள்..!

ஜம்மு காஷ்மீரில் கடத்தப்பட்ட கிராம பாதுகாப்புப் படையினர் இரண்டு பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரண்டு கிராம பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவலை தடுக்க ராணுவத்துடன் சேர்ந்து அம்மாநில காவல்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள கிராமங்களில் சில உள்ளூர் இளைஞர்களும் காஷ்மீர் காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள கிராம பாதுகாப்புக் குழுவில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், அத்வாரி பகுதியை சேர்ந்த நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் கிராம பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ளனர். இந்த சூழலில், இவர்கள் இருவரும் அத்வாரி பகுதியில் உள்ள முன்ஸ்லா தார் காட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளனர். மாலை நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: "அப்படியெல்லாம் செய்ய முடியாது".. கொல்கத்தா ஆர்..ஜி.கர் மருத்துவமனை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதனை தொடர்ந்து அந்த அடர்ந்த வன பகுதியில் காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் காணாமல் போன இருவரையும் கடத்தி கொன்றதாக பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புகைப்படத்துடன் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த கொலைக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கிளையான காஷ்மீர் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, எக்ஸ் தளத்தில் அஞ்சலி தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், '' கிஷ்த்வாரில் நடந்த கிராம பாதுகாப்புக் குழுவினர் மீதான கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் இல்லை. இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணிச்சலான மகன்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் அழித்து, இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பழிவாங்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருவரது படுகொலைக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் செயல்கள் ஜம்மு காஷ்மீரின் அமைதிக்கு தடையாக இருந்து வருகின்றன. இந்த துயரமான நேரத்தில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்காக பிராத்தனை செய்வோம்'' என தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.