டெல்லி: திமுக மாநிலங்களவை உறுப்பினரான பி.வில்சன் பாராளுமன்ற சிறப்பு உரையின் போது செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தனது X தளத்தில், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றத்தை வளர்ப்பதற்கும், தனிப்பட்ட விபரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இடையேயான சம நிலையை உறுதிப்படுத்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக வேலை இழப்பு அபாயம் உள்ளது.
கட்டுப்பாடுகள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது மனிதக் குலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தல் என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். இதனை அனைவரும் ஒன்று இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.