தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுவாதி மலிவால் வழக்கு: பிபவ் குமார் காவல் 14 நாட்கள் நீட்டிப்பு! - Swati Maliwal case - SWATI MALIWAL CASE

டெல்லி எம்பி சுவாதி மலிவால் தாக்கப்பட்டதாக வழக்கில் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து பிபவ் குமார் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 5:29 PM IST

டெல்லி:ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரை கடந்த மே 18ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்தும் ஜாமீன் வழங்கக் கோரியும் பிபவ் குமார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கி மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிபவ் குமார் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. பிபவ் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுவாதி மலிவால் தாக்கப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி பிபவ் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும் இது தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து டெல்லி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் கோரி பிபவ் குமார் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை அதற்கு முன்னதாக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணை நீதிமன்றத்திற்கு முன் அவர் ஆஜர்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அவர் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் வாதிட்டதாகவு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுவாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் தனக்கு எதிரான கைது நடவடிக்கையை கண்டித்து பிபவ் குமார் தாக்குதல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். இதனிடையே, இந்த வழக்கில் பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதை அடுத்து மேலும் 14 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுவாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

இதையும் படிங்க:ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்- நீதிமன்றம்! - Prajwal Revanna Police Custody

ABOUT THE AUTHOR

...view details