டெல்லி :மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து தவிர்த்து வருவதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய மனு தாக்கல் செய்து உள்ளது. மனுவை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, மார்ச் 16ஆம் தேதிக்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
டெல்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் அரசுக்க் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வழக்கு தொடர்பாக டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு அஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது.