தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா விமானப் படைக்கு 97 தேஜஸ் போர் விமானம் கொள்முதல்! இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம்! - Tejas Fighter Jet - TEJAS FIGHTER JET

Tejas Mk-1A: இந்துஸ்தான் எரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 67 ஆயிரம்ம் கோடி ரூபாய் மதிப்பிலான 97 தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் டென்டர் வழங்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 5:33 PM IST

டெல்லி : இந்திய விமான படைக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 97 இலர ரக தேஜஸ் எம்கே-1ஏ வகை போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கி உள்ளது.

இந்திய விமானப் படையில் உள்ள மிக் 21, மிக் 23, மிக் 27 ரக போர் விமானங்களுக்கு பதிலாக புதிய ரக போர் விமானங்களை சேர்க்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 97 தேஜஸ் எம்.கே.1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கி உள்ளது.

தேஜஸ் வகை போர் விமானங்கள் வான் பாதுகாப்பு, ஊடுருவல் தடுப்பு, கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் 97 தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 97 Tejas Mk-1A வகை போர் விமானங்கள் இந்திய விமானப் படைக்காக கொள்முதல் செய்ய எச்ஏஎல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய விமானப் படைக்கு SU-30 போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்து உள்ளது.

இதையும் படிங்க :"1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு ரூ.1 லட்சம்"- ஆர்ஜேடி தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details