புவனேஸ்வர்:டானா புயல் மணிக்கு 110 கிமீ வேகத்துடன் கூடிய காற்று,கனமழையுடன் ஒடிசா அருகே வியாழக்கிழமை நள்ளிரவு கரையை கடந்த நிலையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மோகன் மாஜி ஆய்வு மேற்கொண்டார்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மோகன் மாஜி,"புயல் மழைக்கு ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. புயல் கரையை கடந்த உடனேயே நேற்று நள்ளிவரவு முதலே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இயல்பு நிலை திரும்பி விடும்.
புயலால் நேரிட்ட சேதங்கள் குறித்து மதிப்பிடும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்த பகுதிகளில் மரங்களை அப்புறப்படுத்தி சாலை போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல மின் சேவை இன்று மாலைக்குள் சீரடையும்.
இதையும் படிங்க:ஒடிசாவின் 11 மாவட்டங்களில் இரண்டாவது நாளாக கனமழை...பூரி-சாகர் தீவுக்கு இடையே டானா புயல் கரையை கடக்கும் என கணிப்பு!