டெல்லி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(CPI(M) பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி நெஞ்சக நோய்த் தொற்று பாதிப்பால் கடந்த மாதம் 19-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(செப்.12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார் - sitaram yechury - SITARAM YECHURY
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல் தலைவருமான சீதாராம் யெச்சூரி( வயது 72) உடல்நலக்குறைவால் காலமானார்.
Published : Sep 12, 2024, 4:34 PM IST
சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி, மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இடதுசாரி கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பல முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.