டெல்லி: காங்கிரஸ், பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் K.C.வேணுகோபால் கூறுகையில், "ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும், செபி தலைவர் மதாபி புச்சை நீக்க வேண்டும் என்றும், அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுதல், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியன குறித்தும் நாடு முழுவதும் தனி போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வருமானம் குறைவு, வினாத்தாள் கசிவு, பாஜகவின் பிளவு உள்ளிட்டவற்றைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் கூறுகையில், “சாமானிய மக்களின் துயரங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையை அமைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அது குறித்து கவலைப்படுவதில்லை.