பாட்னா : பீகாரில் ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறித்துக் கொண்டு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, நிதிஷ்குமார், அன்று மாலையே பாஜவுடன் கூட்டணி அமைத்து புதிதாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது தலைமையில் அமைச்சரவை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியின் மீது பிப்ரவரி 12ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முதலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நிதிஷ் குமார் தலைமையில் தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளதால், பீகார் சட்டப்பேரவையில் நிதீஷ் குமார் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றால், பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நீடிக்கும். பீகார் சட்டப்பேரவையில் பிப்ரவரி 12ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.