ETV Bharat / bharat

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 நக்சலைட்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! - 10 NAXALITES KILLED

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் பகுதியில் ஊடுருவிய 10 நக்சலைட்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 2:52 PM IST

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுக்மா மாவட்டத்தின் பாஸ்டர் பகுதியில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 10 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இது குறித்து பேசிய சுக்மா எஸ்பி கிரன் சவான்,"பெஜ்ஜி பகுதியில் நக்சலைட்கள் ஊடுருவி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சுக்மாவின் கோண்டா அருகில் உள்ள பெஜ்ஜி பகுதியில் இன்று காலை 6 மணி முதல் நக்சல்கள் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆயுத பாதுகாப்ப படை போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. தேடுதல் வேடை முழுமையாக முடிந்த பின்னர்தான் மேலும் விவரங்கள் தெரியவரும்," என்றார்.

மலை பகுதி வழியே ஒடிசாவில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்குள் நக்சலைட்கள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை என்கவுண்டர் செய்தனர். என் கவுண்டருக்குப் பின்னர் அந்த இடதில் இருந்து தானியங்கி துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே வியாழக்கிழமையன்று ஒடிசா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மால்கன்கிரி பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார் பாதுகாப்பு படை வீர ர் ஒருவர் காயம் அடைந்தார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 5 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.