ETV Bharat / state

"முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார் செந்தில் பாலாஜி" - சவுக்கு சங்கர் சாடல்! - MINISTER SENTHIL BALAJI

அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 10:35 PM IST

கரூர் : கரூரில் வழக்கு சம்பந்தமாக இன்று மாலை நான்கு மணி அளவில் கோவை சாலையில் உள்ள வழக்கறிஞர் கரிகாலன் அலுவலகத்திற்கு வருகை தந்த யூடியூபர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அதானி குழுமத்தோடு தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சவுக்கு சங்கர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அமெரிக்காவில் அதானி குழுமத்தின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகள் நேரடியாக மின்சாரம் வாங்க தயங்குகின்றன. அப்படி தயங்கும் மாநில அரசுகளை, மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் சிக்கி உள்ளது என்பதை குறிப்பிட்டு தான் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, மின்சாரம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை முழுமையாக மறைக்கும் எண்ணத்தோடுதான், அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். இப்படி முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகு, மீண்டும் அதே துறை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறை செல்வதற்கு முன்பு எவ்வாறு கொள்ளையடித்தாரோ அதே வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். மீண்டும் அமைச்சர் பதவி சிறையிலிருந்து வெளியே வந்த மூன்றே தினங்களில் அதே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேனியில் 60 வயது போலி மருத்துவர் கைது.. மருந்து, மாத்திரைகள் பறிமுதல்!

உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையில், எளிதாக எடுத்துக் கொள்ளாது. உச்சநீதிமன்றத்தில் விரைவில் அவரது ஜாமீன் உத்தரவை ரத்து செய்யும் மனு விசாரணைக்கு வரவுள்ளது. ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது அரசு வழக்குப் பதிந்து அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது. திமுக அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் நான் பேசி வருவதை ஒடுக்கும் வகையில், திமுக எதிர்ப்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும், என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை சட்டரீதியாக நான் சந்திப்பேன். தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக பேசுவேன்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன் என்று பலமுறை தமிழக முதலமைச்சர் பேசியுள்ளார். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சர்வ சாதாரணமாக பள்ளி, கல்லூரி நீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு துளி கூட சரியில்லை. இதற்கு தமிழக முதலமைச்சர் தான் பொறுப்பு. மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ஈடிவி பாரத் தமிழ்நாடு)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.