ETV Bharat / state

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரிய வழக்கு; அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு! - HIGH COURT OF MADURAI BENCH

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரிய வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

High Court-Madurai Bench
உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 10:56 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் பல்வேறு வகை மரங்கள் அடர்த்தியாக இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன்பே முழுவதும் வெட்டப்பட்டுவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்கள்தான் அடர்த்தியாக காணப்படுகின்றன.

மேலும், வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்து இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: மாணவனை காலைப் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர் சஸ்பென்ட்...வீடியோ வைரல் ஆன நிலையில் கல்வித்துறை நடவடிக்கை!

ஆகவே, வைகை ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்.

மேலும், வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலித்து, அந்த தொகை மூலம் வைகை ஆற்றை மறுசீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரிகை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.