தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு! - Uttar Pradesh train derails - UTTAR PRADESH TRAIN DERAILS

Chandigarh-Dibrugarh Express derails: உத்தரப்பிரதேசத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Train
உபி ரயில் விபத்து (Credits - ETV Bharat)

By PTI

Published : Jul 18, 2024, 3:49 PM IST

Updated : Jul 18, 2024, 4:59 PM IST

கோண்டா: உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா அருகே இன்று பிற்பகல் 2.35 மணியளவில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது மோட்டிகஞ்ச் மற்றும் ஜிலாஹி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக் கூறியுள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் நிவாரண ஆணையர் ஜிஎஸ் நவீன் குமார், 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 40 பேர் அடங்கிய மருத்துவக் குழு மற்றும் 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், இந்த விபத்து தொடர்பாக உதவி தேவைப்படுவோருக்கான எண்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, வணிகக் கட்டுப்பாடு - 9957555984, ஃபர்காட்டிங் (FKG) - 9957555966, மரியாணி (MXN) - 6001882410, சிமல்குரி (SLGR) - 8789543798, டின்சுகியா (NTSK) - 9957555959, திப்ருகர் (DBRG) - 9957555960 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்பட அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் உள்பட சம்பந்தப்பட்ட துறைகள் விரைவில் செய்து தர அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பேருந்துக்கும் தடுப்புக் கம்பிக்கும் இடையில் சிக்கி பெண் பரிதாப உயிரிழப்பு.. திருவேற்காடு அருகே சோகம்!

Last Updated : Jul 18, 2024, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details