டெல்லி :கிரு நீர்மின் திட்ட ஊழல் வழக்கில் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தொடர்புடையை இடங்களும் அடங்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. தான் விவசாயியின் மகன் இது போன்ற சோதனைகளை கண்டு பயப்பட மாட்டேன் என்றும் சத்திய பால் மாலிக் தெரிவித்து உள்ளார்.
சிபிஐயின் சோதனைகளை உறுதிப்படுத்தும் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த 3 அல்லது நான்கு நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன், இருப்பினும், எனது சர்வாதிகார அரசின் அமைப்புகளால் சோதனையிடப்பட்டு உள்ளது.
மேலும் எனது ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் சோதனை என்கிற பெயரில் எந்த காரணமும் இன்றி துன்புறுத்தப்பட்டு உள்ளனர். நான் விவசாயியின் மகன், இது போன்ற சோதனைகளுக்கு ஒரு போது அஞ்ச மாட்டேன். நான் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கிறேன் - சத்திய பால் மாலிக்" என்று பதிவிட்டு உள்ளார்.