புதுடெல்லி:நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அனைத்து கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்த உள்ளார். அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜன.30) பிற்பகல் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கும் அமர்வு பிப்.9 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட் ஆனது மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்கும் அரசாங்கம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தின் தேவைகளை தற்போது தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் பூர்த்தி செய்கிறது.
முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது.