சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி), ஜனநாயக் ஜனதா கட்சி என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
மொத்தம் உள்ள 90 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று மதியம் 2.45 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவல் படி, பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 44 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.
காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 27 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது. ஐஎன்எல்டி 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க:உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது கொலைவெறி தாக்குதல்.. நாக்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் உட்பட இருவர் பலி
தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளது தெரியவந்தாலும், இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜக 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலை வகிக்கின்றன.
அதன்படி, புந்திரி தொகுதியில் 2197 வாக்குகள் வித்தியாசத்திலும், இந்திரி- 4086, கராவுண்டா- 1138, அசாந்த்- 4614, ஆதம்பூர்- 3039, தாத்ரி- 4161, ரோத்தக்- 302, மஹேந்திரகர்- 2547, ஹோடல்- 1337 என்ற அடிப்படையில் பாஜக 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்த 9 தொகுதிகளின் முடிவுகள் மாறும்பட்சத்தில் வெற்றி நிலவரமும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்