ஹைதராபாத்:சமீபகாலமாக மக்கள் காபியை உணர்வோடு ஒன்றிய ஒரு பானமாக பார்க்கின்றனர். முன்னாளில் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்கவும், காலையில் விடிந்தவுடன் புத்துணர்சிக்காவும் காபியை பருகுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது சோகமாக இருந்தாலும், பசி எடுத்தாலும் என மக்கள் அடிக்கடி காபி குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு நாளில் 100 காபிகளை ருசிக்கும் ஆசியாவின் முதல் பெண் காபி ருசிகர் சுனாலினி மேனனின் பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். சமீபத்தில், ஈடிவி பாரத் ஹைதராபாத்தில் நடந்த 'இந்திய காபி விழாவில்' தலைமை விருந்தினராக பங்கேற்றார் சுனாலினி மேனன். அதில் அவரது ருசிக்கான தேடலையும், சுவைக்கான மூலத்தையும் ஈடிவி பாரத் உடன் பகிர்ந்து கொண்டார்.
சென்னை சமையலறையும், காபியும்:சுனாலினி மேனன் அவரது தாய் செய்யும் காபியை மிக விருப்பத்துடன் பருகுபவராவர். மேனனின் காபி பிரியத்தை உணர்ந்த அவரது தாய், சுனாலினி மேனனுக்காக பல்வகையான காபி பீன்ஸ் வாங்கி வீட்டில் காபி செய்து கொடுப்பதை பழக்கமாக வைத்திருந்தார். அவரது சுவைக்கான தேடல் தளமாக அமைந்தது, சமையலறை. அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வசித்து வந்தவர். சில குடும்பச் சூழல் காரணமாக அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அங்கு அவரது தாத்தாவின் முற்போக்கான கண்ணோட்டமானது, ஆண்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை பெண்களுக்கும் தர வேண்டும் என்ற எண்ணமாகும். மேலும், சுனாலினி மேனனின் மாமா ஒரு தீவிர காபி விரும்பியாக இருந்த நிலையில், சுனாலினி மேனனுக்கு காபி மீதான ஆர்வம் அதிகரித்தது.
இதையும் படிங்க:எப்போது காபி குடிக்கலாம்.. மருத்துவர் கூறுவது என்ன?
காபியை கரியராக ஏற்ற முதல் பெண்:சுனாலினி மேனன் தனது முதுகலை படிப்புக்கான விசாவிற்காக காத்திருந்தார். அப்போது காபி டேஸ்டரைத் தேடும் காபி வாரியத்தின் அறிவிப்பில் பதிவு செய்திருந்த சுனாலினி மேனன் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் வந்தது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கு பல காபி தொடர்புடைய அறிவு பெற்றவர்களுடன் போட்டியிட்டும், அதில் சுனாலினி மேனன் எடுத்துரைத்த வித்தியாசமான கண்ணோட்டம், அவரை காபி டேஸ்டரைத் தேடும் காபி வாரியத்திற்கு தேவைப்படும் புதுமையாக தோன்ற வைத்துள்ளது. அதானாலேயே அவர் அதில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் காபியை கரியராக ஏற்றுக்கொண்டார்.
கடந்து வந்த பாதையும் உதவிய காபியும்:மேனனின் காபி டேஸ்டர் பணியானது, அப்போது ஆண்கள் அதிகமாக பணியாற்றும் தளம். எனவே, அதில் அதிக உழைப்பு போட்டால்தான் முன்னேற முடியும், தனித்து தெரிய முடியும் என மேனன் உறுதியோடு இருந்தார். மேனனுக்கு பில்டர் காபி மற்றும் கடுங்காபி இருக்கும் இடத்தில் எப்போது எத்தியோப்பியன் மற்றும் காங்கோ சார்ந்த பட்டர்கப் காபிக்கு முன்னுரிமை கொடுப்பவர். அதற்கு காரணம், அந்த காபிக்களின் செய்முறையும், ருசி பக்குவமும் ஆகும். அவரது விடாமுயற்சியால் உதவி சுவையாளராக இருந்த சுனாலினா, தரக் கட்டுப்பாட்டுத் தலைவராக உயர்ந்துள்ளார்.
விவசாயப் புதுமை: பின் அவர் சொந்தமாக காபி லேப் லிமிடெட் எனப்படும் நிறுவனத்தை நிறுவினார். அதில் காபி பீன் தரம், நொதித்தல், வறுத்தல் மற்றும் சேமிப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி விவசாயிகளுக்கு கற்பித்தார். இந்த முன்முயற்சி விவசாயிகளுக்கு அவர்களின் நடைமுறைகளை மேம்படுத்தவும், உயர்தர தரத்தை பராமரிக்கவும் காபியில் புதுமையை புகுத்துவமும் உறுதுணையாக இருந்தது.
வாசனை மற்றும் தோற்றத்தில் மதிப்பிடுப்பவர்:மேனன், சர்வதேச காபி கண்காட்சிகளில் அதிக குறிப்புகள் எடுப்பவர். இத்தாலியில் உள்ள டாக்டர் எர்னஸ்டோ இலி, எத்தியோப்பியா, குவாத்தமாலா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிபுணர்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு காபியின் வாசனை மற்றும் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்டார்.
தினமும் கற்கும் காபி பிரியை:தினமும் 100 காபி குடிப்பதால் காபி ஒன்றும் எனக்கு வெறுத்துப் போவதில்லை என்றார் மேனன். அனைத்து காபிகளிலும் விஞ்ஞான அணுகுமுறை, வெப்பநிலையுடன் சுவைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை புரிந்துகொள்வது காபி மீதான காதலை புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது என்றார்.