தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் மீது முறையான விசாரணை; செபி தகவல்! - Hindenburg vs SEBI - HINDENBURG VS SEBI

Hindenburg vs SEBI: ஹிண்டன்பர்க் (Hindenburg) நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

செபி கோப்புப்படம்
செபி கோப்புப்படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 11:00 PM IST

மும்பை:அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்துள்ளதாக முதலீடு சந்தை கட்டுப்பாட்டகமான செபி (Sebi) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செபியின் தலைவர் மாதாபி புச் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டார் மற்றும் முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன்னைத்தானே விலக்கிக் கொண்டதாக, செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் மீது முறையான விசாரணை மேற்கொண்டதாகவும், 26 கட்ட விசாரணைகளில் கடைசி விசாரணை தற்போது முடியும் நிலையில் இருப்பதாகவும் செபி கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, புச் மற்றும் அவரது கணவர் தவால் ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்றும், செபியின் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதன் தலைவரைப் கொலை செய்ய முயற்சித்தனர் என்றும் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, அதானி குழுமத்திற்கு எதிராக செயல்பட செபி விருப்பம் தெரிவிக்காததற்கு காரணம், அதன் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம் என ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. அதற்கு மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இருவரும் பதிலடி கொடுத்து அறிக்கையும் வெளியிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'எங்களது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்'.. ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் பதில்..!

ABOUT THE AUTHOR

...view details