ஐதராபாத் : மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி தனது எக்ஸ் பக்கத்தில்,"பாஜக கூட்டணி இல்லை என்றும் வருங்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக தெரிவித்து உள்ளது.
"மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு"- ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி! - Lok sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
மக்களவை தேர்தலில் அதிமுக ஆதரவு அளிப்பதாக ஐதராபாத் எம்பியும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்து உள்ளார்.
Published : Apr 13, 2024, 5:38 PM IST
மேலும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களை எதிர்ப்பதாக உறுதி அளித்து உள்ளது. இதையடுத்து எதிர்வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆதரவளிக்கிறது. எங்கள் கூட்டணி சட்டப்பேரவை தேர்தல் வரை தொடரும்" என்று அசாதுதீன் ஒவைசி பதிவிட்டு உள்ளார். முன்னதாக, மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அசாதுதீன் ஒவைசி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :மேற்கு வங்கத்தில் குடிசைப் பகுதியில் பயங்கர தீவிபத்து - 50 குடிசைகள் தீக்கிரையாகின! - West Bengal Fire