தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரேணுகா சாமி கொலை வழக்கில் திருப்புமுனை.. நடிகர் தர்ஷன் மேனேஜர் ஸ்ரீதர் தற்கொலை! - Renukaswamy Murder Case - RENUKASWAMY MURDER CASE

Renukaswamy Murder Case: பெங்களூருவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷனின் வட்டாரத்தை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று பெங்களூரு ஃபார்ம் ஹவுசில் தர்ஷன் மேனேஜர் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தர்ஷன் புகைப்படம்
நடிகர் தர்ஷன் புகைப்படம் (credits - enadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 2:53 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட ரேணுகா சாமி வழக்கு தீவிரம் அடைந்து திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நடிகர் தர்ஷனின் மேனேஜர் ஸ்ரீதர் நேற்று(ஜூன் 18) தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை சம்பவம் பெங்களூருவில் உள்ள நடிகர் தர்ஷனின் ஃபார்ம் ஹவுசில் நடைபெற்றுள்ளது. மேலும், இறப்பதற்கு முன்பு தர்ஷன் மேனேஜர் ஸ்ரீதர் தனது செல்போனில் வீடியோ பதிவு ஒன்றைப் பதிவாக்கி உள்ளார். அதில், நான் தனிமையாக இருப்பதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதால் தான் இந்த முடிவை எடுக்கிறேன். என்னுடைய இறப்பிற்கு யாரும் காரணமில்லை என வீடியோ பதிவில் கூறப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த 2003ஆம் ஆண்டில் நடிகர் தர்ஷன் விஜயலட்சுமி என்ற பெண்ணை மணந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில், நடிகர் தர்ஷன்க்கும் நடிகை பவித்ரா கவுடாவுக்கும் நட்பு மலர்ந்து, காலப்போக்கில் அது திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது.

மேலும், தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பவித்ரா கவுடா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அதனை ரேணுகா சாமி விமர்சித்து வந்ததால், ஏற்பட்ட பிரச்னையில் இந்த கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட 15 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: அசாம் உள்துறை செயலாளர் தற்கொலை! புற்றுநோய் பாதித்த மனைவி உயிரிழந்த சோகத்தில் துயர முடிவு! - Assam Home Secretary suicide

ABOUT THE AUTHOR

...view details