பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹெபலில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில் 1947 முதல் 1962 வரையிலான காலக்கட்டத்தில் சிந்த் (Sindh) சமூக மக்களின் பிரிவினை மற்றும் இடம்பெயர்வு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சிந்த் சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களாக நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தமன்னா குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பெற்றோர் கூறுகையில், “நடிகை தமன்னா கவர்ச்சி மற்றும் சில துணிவுமிக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளார். அப்படி இருக்கையில், எவ்வாறு குழந்தைகளின் ரோல் மாடலாக தமன்னா இருக்க முடியும்?