டெல்லி:பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே, சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூன் 7ஆம் தேதி வீடு திரும்பியிருந்தார். இதற்கிடையே, அவர் நேற்றிரவு (புதன்கிழமை) உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! - LK Advani admitted Hospital - LK ADVANI ADMITTED HOSPITAL
LK Advani admitted Hospital:பாஜக மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி(96) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்வானி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி (Credits - ANI)
By ANI
Published : Jul 4, 2024, 11:16 AM IST
இந்த நிலையில், மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியின் கண்காணிப்பில் அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஜார்கண்ட் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்! சம்பை சோரன் ராஜினாமா! - Jharkhand CM Hemant Soren