சத்தீஸ்கர்: பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பெமேதரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெமேதரா மாவட்டத்தில், பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குடும்ப நிகழ்ச்சிக்காக திராய்யா கிராமத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த வீடு திரும்பியவர்கள், கத்தியா பகுதியில் வந்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 23 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் படுகாயமாடைந்தவர்களை மீட்டு பெமேதாரா மாவட்ட மருத்துவமனை மற்றும் சிம்காவின் சமூக சுகாதார மையம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.