ETV Bharat / bharat

ராமோஜி ராவ்: எல்லோருக்குமான எதிர்காலத்தை கனவு கண்டவர்

தேசிய பத்திரிகை தினம் மற்றும் ராமோஜி ராவின் பிறந்த நாளான இன்று ஈநாடு பத்திரிகை ஆசிரியரான மனுகொண்ட நாகேஷ்வரராவ் எழுதியுள்ள கட்டுரை இது.

ராமோஜி ராவ் (கோப்புப்படம்)
ராமோஜி ராவ் (கோப்புப்படம்) (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

ஹைதராபாத்: 'சுதந்திரமான, பக்கச்சார்பில்லாத, நெறிமுறை சார் இதழியலுக்காக நிற்போம்' என்று இன்று நம் நாட்டில் உள்ள பல நாளிதழ்கள் விளம்பரப்படுத்தி வருகின்றன. அதற்கு காரணம், இன்று தேசிய பத்திரிகை தினமாகும். இந்த விளம்பரம், பல ஊடக நிறுவனங்களுக்கு வெறும் விளம்பரமாக இருக்கலாம். ஈநாடு குழுமத்திற்கு இது உயிர்நாடி. 58 ஆண்டுகளுக்கு முன்பு 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது.

பிரஸ் கவுன்சில் தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு நிறுவனருமான ராமோஜி ராவ், நவம்பர் 16, 1936 இல் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் பிறந்தார். கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி காலமானார்.

ஊடகத்துறையில் ராமோஜி ராவ் கண்ட முன்னேற்றங்கள் இன்று வரை மற்றவர்களுக்கு மைல்கற்களாக விளங்குகின்றன. அவர் தனது செயல்பாடுகளை ஊடகத்துறையில் மட்டுமே நிறுத்திவிடவில்லை. அவர் நிதி, திரைப்படத் தயாரிப்பு, ஸ்டுடியோ நிர்வாகம், உணவு, சுற்றுலா, ஹோட்டல்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளி, கல்வி மற்றும் பல துறைகளில் நுழைந்து, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தவர்.

இந்த வணிகங்களால் கிடைத்த வரிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் அரசுக்கு சென்றுள்ளது. உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரமான ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவப்பட்டதிலிருந்து 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு வந்து சென்றுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது மறைவுக்குப் பிறகு அவரது முதல் பிறந்தநாளான இன்று, இந்த நாட்டிற்கு ராமோஜி ராவ் போன்ற வளமான செல்வத்தையும், வேலைவாய்ப்பையும் உருவாக்குபவர்கள் நம் நாட்டிற்கு தேவை என்பதை நினைவுகூர வேண்டும்.

வானமே எல்லை

ராமோஜி ராவ் 1974 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் ஈநாடு பத்திரிகையை தொடங்கினார். பின்னர் நான்கே ஆண்டுகளில் 26 மாவட்டங்களில் பதிப்பு மையங்களை விரிவுபடுத்தினார். 1983ல், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தெலுங்கு தேசம் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கினார். அடுத்த ஆண்டு, என்டிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட போது, மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்து துணிந்து பத்திரிகையை வெளியிட்டார்.

அத்துடன், உலகப் புகழ்பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டியையும் கட்டியெழுப்பினார். மேலும் பல மொழிகளில் இந்தியா முழுவதும் செய்திகளை வெளியிடுவதற்காக, ஈடிவி தொலைக்காட்சி, ஈடிவி பாரத் இணைய ஊடகத்தை தொடங்கினார்.

ராமோஜி ராவின் வாழ்க்கையில் சாகசங்கள் அனைத்தையும் பணயம் வைத்தது. 2006, 2022ல் ஈநாடு குழுமத்தை அழிக்கும் அரசின் சதியை எதிர்த்துப் போராடிய அவர், ‘உறுதி இருந்தால் வானமே எல்லை’ என்று எப்போதும் சொல்வார். அவர் அடைந்த உயரங்களும், அதிகார மையங்களோடு அவர் கொண்டிருந்த நெருக்கமும் அவரது ஆளுமையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

"திங்க் அவுட் ஆப் தி பாக்ஸ்" என்று சொல்வதைப் போல, விஷயங்களை வித்தியாசமாகப் பார்ப்பதும், வித்தியாசமாகச் சிந்திப்பதும் அவருடைய குணாதிசயங்களில் ஒன்று. அவர் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தொழிலிலும் ராமோஜி ராவ் புதிய பாதையை உருவாக்கினார். குறிப்பாக முடிவைக் கணிக்கக்கூடியவராகவும் அவர் இருந்தார். 88 வயதிலும் அவரது எண்ணங்கள் சம காலத்திற்கு ஏற்றவாறே இருந்தன. அவரது உடல்நலத்தில் ஏற்பட்ட பலவீனம் அவரது எண்ணங்களைத் தடுக்க முடியவில்லை. உடல்நலம் குன்றி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இறுதி நாட்களில்கூட அவரது எண்ணங்கள் அப்படியேதான் இருந்தது.

பொதுநலம் தான் உயர்ந்தது

ராமோஜி ராவ் மக்களை தெய்வமாகவே பார்ப்பார். ஆனால், அடிப்படையில் அவர் ஒரு நாத்திகர் ஆவார். எளிய மக்களை கருணையாக அணுகுவது, எதைச் செய்தாலும் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அவரது குணாதிசயம். ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியபோது, ​​கோபத்தில் கொதித்தெழுந்தவர், பொதுமக்களுக்காக தனது ஊடகங்களை ஆயுதமாக்கினார்.

தெலுங்கு மக்கள் மத்தியில் ஈநாடு-க்கு பெரும் வாசகர்கள் இருந்தபோதிலும், நம்பகத்தன்மையை தன் உயிர் போலவே பாதுகாத்தார். பேரிடர்களின்போது அவர் தனது தொண்டு நிகழ்ச்சிகளின் மூலம் மக்களுடன் நின்றார். ஈநாடு தொடக்கத்தில் ஓரளவு லாபம் ஈட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அதைத் தன் தீர்மானமாகச் செய்தவர் ராமோஜி ராவ்.

அவர் தொடங்கியுள்ள 'ஈநாடு நிவாரண நிதி' இயற்கை பேரிடர்களால் அழிந்த சமூகங்கள் மற்றும் கிராமங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. நாற்பது ஆண்டுகளில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க இந்த தொண்டு நிறுவனம் பல நூறு கோடிகளை செலவழித்துள்ளது. ராமோஜி அறக்கட்டளை மட்டும் சுமார் ரூ.100 கோடியை மக்கள் நலனுக்காக செலவிட்டுள்ளது. அவரது மறைவுக்குப் பிறகு, ராமோஜி குழும நிறுவனங்கள் அவர் வகுத்த அதே பாதையில் தொடர்ந்து செல்கின்றன.

தெலுங்கு மீதான காதல்

ராமோஜி ராவ், தெலுங்கு மக்கள் மீதும், மொழி மீதும் கொண்ட காதல் அளப்பரியது. தெலுங்கு மாநிலங்களின் செழிப்பு, தெலுங்கு மொழியின் முன்னேற்றத்துடன் பிணைந்துள்ளது என்று அவர் உறுதியாக நம்பினார். சதுரா, விபுலா, தெலுங்கு வெலுகு, பால பாரதம் போன்ற பத்திரிக்கைகளில் தெலுங்கின் மீதான அவரது காதல் அதிகமாக வெளிப்பட்டது. அவர் தனது செய்தித்தாள் மற்றும் அமைப்புகளுக்கு சரியான தெலுங்கு பெயர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தார்.

குழுவின் எழுச்சி

ராமோஜி ராவ் குழுமத்தை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்காக, இரவு பகல் பாராமல் ஒரு நாளைக்கு 14-16 மணி நேரம் தவறாமல் உழைத்தவர் ராமோஜி ராவ். தினசரி செய்தித்தாளை நிர்வகிப்பது என்பது கடினமான பணி. ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். இதனாலயே, அவர் உலகச் சுற்றுப்பயணங்களுக்குச் செல்ல விரும்பாததற்கு காரணமாகவும் இருக்கலாம்.

அவரது வாழ்க்கை ஒரு பாடநூல்

ராமோஜி ராவ் இருந்த காலத்தில் அவரது வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டால், ''வெற்றிக்கு குறுக்கு வழிகள் இல்லை.. எனது வெற்றியின் ரகசியம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு, பிறகு கடின உழைப்பு. நான் வேலை செய்யும் போது நிம்மதியாக உணர்கிறேன்," என்றே கூறுவார்.

ராமோஜி ராவ் தனது வாழ்க்கையில் காட்டிய அர்ப்பணிப்பு, தைரியம், துன்பங்களைத் தாங்கும் திறன் ஆகியவை தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன. தடைகளை வாய்ப்புகளாகவும், சவால்களை வெற்றியாகவும், தோல்விகளை வெற்றியின் அடித்தளமாகவும் மாற்றுவது எப்படி என்பதை அவர் தனது வாழ்க்கையின் மூலம் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். அவர் எப்போதும் இந்த தேசத்திற்கு உத்வேகமாக இருப்பார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.