ETV Bharat / state

"அண்ணா பல்கலை. ஞானசேகரன் குறித்த ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன்"- அண்ணாமலை சாடல்! - ANNAMALAI ON ANNA UNIVERSITY CASE

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரன் யாருடன் பேசினார்? என்பது குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளன. வழக்கு திசை மாறினால், ஆதாரங்களை நான் வெளியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 12:17 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்திட்டம் ரத்து செய்யப்பட்டதிற்காக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அண்ணாமலைக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பாஜக கொண்டு வராத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு. மேலூர் மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தையும் ரத்து செய்துள்ளோம். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை.

அண்ணா பல்கலை., விவகாரத்தில் ஆதாரம் உள்ளது: ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பது குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆதாரங்களை நான் ஒரு நாள் வெளியிட போகிறேன். வழக்கின் போக்கை தெரிந்து கொண்டு ஆதாரங்களை வெளியிடுவேன். ஞானசேகரன் செய்த குற்ற செயலுக்கு பின் யார் யாரிடம் பேசினார் என என்னிடம் ஆதாரம் உள்ளது. FIR-ஐ லீக் செய்தது யார் என யாரும் விசாரிக்கவில்லை? செய்தியாளர்கள் செல்போனை பறிமுதல் செய்தது தவறான செயல்.

“ஆதாரத்தை வெளியிடுவேன்”: சிறப்பு புலனாய்வுக் குழு முறையாக விசாரிக்கவில்லை என்றால் ஞானசேகரனின் செல்போன் தகவல்களை வெளியீடுவேன். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் பாஜக சட்ட உதவிகளை செய்யும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு திசை திருப்பி கொண்டு செல்லப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லாத முதலமைச்சர் அரிட்டாப்பட்டிக்கு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை புரிந்து கொண்டேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி (ETV Bharat Tamil Nadu)

“செய்தி குறிப்பு பொய்யாக உள்ளது”: பாராட்டு விழாவிற்கு வருவதற்கு வேகம் காட்டிய முதலமைச்சர், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஏன் காட்டவில்லை? ஞானசேகரன் திமுகவை விட்டு இன்னும் நீக்கம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் தமிழக காவல்துறையினர் கொடுக்கக்கூடிய செய்தி குறிப்பு முற்றிலும் பொய்யாக உள்ளது.

இதையும் படிங்க: 'மகாத்மா காந்தி நினைவு நாளை அரசியலாக்காதீர்கள் ஆளுநரே' - அமைச்சர் சாமிநாதன் பதிலடி!

இசிஆர் விவகாரம்: இசிஆர் சம்பவத்தில் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை பெண்களையே குற்றவாளியாக்குகிறது. இசிஆரிலுள்ள என் வீட்டில் கொடியேற்ற முயற்சித்த போது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்தது போல பெண்களை துரத்தும் போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குற்ற செயல்களில் திமுக அரசு பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்கிறது.

செல்வப்பெருந்தகை அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதால் அமித்ஷா பயந்து அகமதாபாத்துக்கு சென்று விடுவாரா? பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களை காவல்துறை பயமுறுத்துகிறது. வேங்கைவயல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செட்டப் செய்து ஆடியோவை வெளியிட்டு உள்ளனர். வேங்கை வயல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தருகிறோம். இவ்வழக்கில் சாதிய மோதல் வரக்கூடாது என்பதற்காக அதே சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரை குற்றவாளி ஆக்கி உள்ளார்கள்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.