ஹைதராபாத்: ராமோஜி ராவின் 88-வது பிறந்தநாளையொட்டி, ராமோஜி குழுமத்தின் பிரியா ஃபுட்ஸ், 'சபாலா மில்லட்ஸ்’ எனும் சிறுதானிய உணவு பொருள்களை, 'பாரத் கா சூப்பர் ஃபுட்' என்ற ஸ்லோகனுடன் அறிமுகம் செய்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து இந்த அறிமுகம் நிகழ்வு நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில், சபாலா மில்லட்ஸ் இயக்குநர் சஹாரி செருகுரி பேசுகையில், "சபாலா மில்லட்ஸ் உணவு பொருள்கள் மக்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து வெளியிடப்பட்ட ஒரு தயாரிப்பாகும்,” எனத் தெரிவித்தார்.
இது பாரம்பரிய இந்திய தானியங்களுக்கும், நவீன சமையல் வகைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. சமச்சீரான ஊட்டச்சத்தை சிறந்த சுவையுடன் அளிக்க வேண்டும் என்ற எங்களின் உறுதியான நம்பிக்கையின் பலனாக சபாலா மில்லட்ஸ் தயாரிப்புகள் இருக்கும் என சஹாரி தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான பாரதத்திற்கான ராமோஜி ராவின் தொலைநோக்கு கனவுகளை நிறைவேற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், எங்கள் நிறுவனர் ராமோஜி ராவின் பிறந்தநாளில் இந்த சிறுதானிய உணவு பொருள்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் என்று அவர் பேசும்போது நெகிழ்ச்சியுடன் கூறினார்.
உணவு நுகர்வு முறைகளில் நேர்மறையான மற்றும் முறையான மாற்றத்தை வளர்ப்பதற்கும், சமச்சீர் ஊட்டச்சத்தை ஊக்குவிப்பதற்கும், உணவின் வாயிலாக நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிராண்டாக சபாலா இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த முயற்சியின் வாயிலாக நுகர்வோர் ஆரோக்கியத்தின் மீதான அர்ப்பணிப்பை ராமோஜியின் பிரியா ஃபுட்ஸ் நிறுவனம் பறைசாற்றியுள்ளது. நவீன வாழ்க்கை முறையில், உணவின் தரம் மீது சமரசம் செய்யாமல் புதிய தயாரிப்புகளை பிரியா ஃபுட்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இவர்களின் புதிய 'சபாலா மில்லட்ஸ்' ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேடுவோர்கான ஒரு பாதையை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
சபாலா மில்லட்ஸ் அதன் நுகர்வோருக்கு பலவிதமான சத்தான மற்றும் சுவையான தயாரிப்புகளை கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக, ல்வேறு மாநிலங்களின் கிச்சடியில் இருந்து (உப்புமா வகைகள்), தினையில் செய்த குக்கீஸ், ஹெல்த் பார்கள் முதல் நூடுல்ஸ் வரை 45 வகையான தயாரிப்புகளை நிறுவனம் களமிறக்கியுள்ளது.
இதையும் படிங்க: ராமோஜி ராவ்: எல்லோருக்குமான எதிர்காலத்தை கனவு கண்டவர்
இதுமட்டும் அல்லாது, சபாலா மில்லட்ஸ் உயர்தர மற்றும் இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவை புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது. அதோடு, "இது ஆரோக்கியமான உணவு விருப்பங்களைத் தேடும் நுகர்வோருக்கு ஏற்றதாக அமையும்," என்கிறார் இதன் இயக்குநர் இயக்குநர் சஹாரி செருகுரி.
இதன் தொடர்ச்சியாக, சபாலா மில்லட்ஸின் இயக்குநர் சஹாரி செருகுரி பிராண்டின் லோகோ, படம் மற்றும் இ-காமர்ஸ் இணையதளமான www.sabalamillets.com ஆகியவற்றை வெளியிட்டார். மேலும், இந்த வெளியீட்டு நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு சபாலா மில்லட்ஸின் புதிய தயாரிப்பு பொருள்களை வழங்கப்பட்டது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்