டெல்லி: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 51.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 23.575 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 48.52 சதவீதமும், ஆந்திராவில் 40.26 சதவீதமும், பீகாரில் 34.44 சதவீதமும், ஜார்கண்டில் 43.8 சதவீதமும், ஒடிசாவில் 39.30 சதவீதமும், மகாராஷ்டிராவில் 30.85 சதவீதமும், தெலுங்கானாவில் 40.38 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 39.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.