தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏகே 47 துப்பாக்கிளுடன் சுற்றிய இளைஞரால் பரபரப்பு! கைதின் பின்னணி என்ன? - Bengaluru AK47 Gun Reels - BENGALURU AK47 GUN REELS

பெங்களுரூவில் போலி ஏகே 47 துப்பாக்கிகளுடன் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Arun Katare (26) made reels with toy guns and bodyguards (ETV Bharat Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 2:49 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்தரதுர்கா பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருண் கட்டாரே. கடந்த ஜூன் 9ஆம் தேதி, சொக்கனஹள்ளி பகுதியில் துப்பாக்கி ஏந்திய மெய்க்காப்பளர்களுடன் வீதியில் நடந்து சென்றுள்ளார். கழுத்தில் பட்டை போன்று தங்கம் சாங்கலிகள், ஏகே 47 துப்பாக்கி ஏந்திய இரண்டு மெய்க்காப்பாளர்களுடன் அருண் கட்டாரே நடந்து செல்வதை கண்டு அதிர்ந்து போன பொது மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அருண் கட்டாரே பிளாகர் என்றும் துப்பாக்கி ஏந்திய மெய்க்காப்பாளர்களுடன் வீதியில் நடந்து சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதையும் போலீசார் கண்டு பிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொத்தனூர் போலீசார், அருண் கட்டாரேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் கணிசமான பின் தொடர்பாளர்களை கொண்டு உள்ள அருண் கட்டாரே இது போன்ற வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருவது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விளையாட்டாக எடுத்த வீடியோ பொது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி கைது வரை கொண்டு சென்ற சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:"நாடாளுமன்ற விதிகளை மதித்து தேசத்துக்கு பணியாற்ற முன்னுரிமை காட்டுங்கள்"- பிரதமர் மோடி! - NDA MPs Meeting

ABOUT THE AUTHOR

...view details