டெல்லி: டெல்லி மகளிர் ஆணையத்தில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் உத்தரவின் அடிப்படையில், மகளிர் ஆணையத்தில் பணிபுரிந்து வரும் 223 ஊழியர்கள் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் திடீர் நீக்கம்! - Delhi Women Commission - DELHI WOMEN COMMISSION
Delhi Women Commission Employees Removed: டெல்லி மகளிர் ஆணையத்தில் பணிபுரியும் 223 ஊழியர்களை அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Women Commission Employees Removed
Published : May 2, 2024, 10:53 AM IST
இந்த நிலையில், மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி ஊழியர்களை நியமித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த புகாரின் அடிப்படையிலேயே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது.