மௌகஞ்ச்: மத்தியப் பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று, 16 வயது சிறுமி, அவரது சகோதரி, சகோதரியின் கணவர் மூவரும் அந்த ஆம்புலன்சில் பயணித்துள்ளனர். ஆனால், இவர்கள் யாருமே நோயாளிகள் இல்லை என்று மௌகஞ்ச் காவல்துறை கூறுகிறது.
மேலும், இவர்களுடன் ஓட்டுனரின் கூட்டாளி ஒருவரும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் நின்றுள்ளது. அப்போது சிறுமியின் சகோதரியும், அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என சொல்லி, ஆம்புலன்சில் இருந்து இறங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் திரும்ப வரும் வரை காத்திருக்காமல் அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
அதன் பின்னர், ஓட்டுனரின் கூட்டாளியான ராஜேஷ் கேவாட் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அன்று இரவு முதல் சிறுமியை தங்களது கட்டுபாட்டிலே வைத்திருந்துவிட்டு, மறுநாள் காலையில் சாலையோரமாக அவரை விட்டு சென்றுள்ளனர். சோர்வான நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்ததை கதறியபடி தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால், வெளியில் சொன்னால் மானம் போய்விடுமோ என்ற பயத்தில், சிறுமியின் தாய் அந்த விஷயத்தை மறைத்துள்ளார்.
இதையும் படிங்க:காதலியை 50 துண்டுகளாக வெட்டிய கறிக்கடை தொழிலாளி.. கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை.. பதறும் க்ரைம் சீன்!