ஆக்ரா:உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் பள்ளி வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக 11 வயது குழந்தையை நர பலி கொடுத்த பள்ளியின் உரிமையாளர், இயக்குநர், முதல்வர் மற்றும் இரு ஆசிரியர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் இரண்டாம் வகுப்பு பயிலும் அம்மாணவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஹத்ராஸில் உள்ள டிஎல் பப்ளிக் பள்ளியின் உரிமையாளரான ஜசோதன் சிங், மாந்தரீக சடங்குகளில் நம்பிக்கை கொண்டவர்.
இந்நிலையில் பள்ளி மற்றும் அவரது குடும்பம் செழிப்பாக இருப்பதற்காக, ஒரு குழந்தையை பலி கொடுக்குமாறு பள்ளியின் இயக்குநரான தனது மகன் தினேஷ் பாகேலிடம் ஜசோதன் சிங் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்தே நரபலி சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து , ஹத்ராஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அசோக் குமார் சிங் கூறியதாவது:
"உயிர் பலி கொடுக்கப்பட்ட மாணவர் டிஎல் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் கிருதார்த் (11) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 23ம் தேதி அன்று, பள்ளி விடுதியிலிருந்து ஆசிரியர்கள் ராம்பிரகாஷ் சோலங்கி, தினேஷ் பாகேல் மற்றும் ஜசோதன் சிங் ஆகியோரால் மாணவர் கடத்தப்பட்டார்.
இதையும் படிங்க:டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்திற்காக வைத்த கோரிக்கைகள் என்னென்ன?