ஹல்த்வானி (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கலவரத்தில் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 71 பேர் மீது போலீசார் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, போலீசார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் மாலிக் உள்ளிட்ட 36 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்ராஸா மற்றும் மற்றொரு இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டதாகக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இடிக்க வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நய்னிடால் மாவட்டம், ஹல்த்வானி, பன்பூல்புரா பகுதியில் கலவரம் நடைபெற்றதாக முகானி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தில் கற்கள் வீசப்பட்டதில் பல அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.