வாகனங்களைக் கண்டு பிளிறிய யானைக் கூட்டம் - Wild elephants camped by the roadside
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், சாலையில் செல்லும் வாகனத்தைக் கண்டு காட்டுயானைகள் கோபத்துடன் தும்பிக்கையை ஆட்டியபடி பிளிறும் காணொலிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.