குமரியில் தொடர் மழை - வீடுகளில் புகுந்த வெள்ளம்! - latest news
🎬 Watch Now: Feature Video
கடந்த சில நாட்களாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. பெய்து வரும் தொடர் மழையால், மாவட்டத்தில் மார்த்தாண்டம் காய்கறி சந்தை, கல்லூரி சாலை போன்ற பகுதிகளிலுள்ள ஓடையில் மழை நீர் வெள்ளம் பாய்ந்து ஓடுவதால், அந்தப் பகுதியில் உள்ள ஓடையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, மார்த்தாண்டம் 17 ஆவது வார்டு பகுதியிலுள்ள 12க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவு நீர், மழை நீர் புகுந்தது.
கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்த வெள்ளம் போல் வீடுகளில் தேங்கியுள்ளதால், தண்ணீரை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இருப்பினும், தொடர் மழை பெய்துவருவதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.