சென்னை: பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சி இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்துள்ளார்.
இவ்விழாவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்களின் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னையின் 18 இடங்களில் நாளை முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரையில், 4 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நடைபெற உள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #ChennaiSangamam | #chennaisangamam2025 |
— TN DIPR (@TNDIPRNEWS) January 13, 2025
1/2 pic.twitter.com/b5DOTuFemU
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெறும் இடங்கள் :
பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் திடல், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, ஜாபா்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகா் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூா் அரசு அருங்காட்சியகம், ஏகாம்பரநாதா் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகா் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகா் பூங்கா, கே.கே.நகா் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா் எஸ்.வி.விளையாட்டுத் திடல்.
#WATCH | Chennai | Tamil Nadu CM MK Stalin inaugurated the Chennai Sangamam Festival, celebrating the state's rich art and culture
— ANI (@ANI) January 13, 2025
(Source: TN DIPR) pic.twitter.com/M8rxu1g6GV
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. விஷயம் இதுதான்!
விழா நடைபெறும் இடங்களில் உணவுத்திருவிழாவும், பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளையும் பார்வையாளர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, டி.ஆர்.பி. ராஜா, மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.