VIDEO:பெரம்பலூர் அருகே கிணற்றுள் தத்தளித்த குரங்கு..பத்திரமாக மீட்பு.. - ஜெசிபி
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே கொட்டரை கிராமத்தில் கிணறு ஒன்றில் விழுந்த குரங்கு ஒன்று தென்னை மர மட்டையினை பிடித்து உயிருக்குப் போராடிய நிலையில், சில இளைஞர்களின் முயற்சியால் ஜேசிபி இயந்திரத்தின் உதவியின் மூலம் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், குரங்கை மீட்ட இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.